டி.ஆர்.ராஜகுமாரியின் முதல் படம் "கச்சதேவயானி" சூப்பர் ஹிட்

"சந்திரலேகா"வில் புகழின் சிகரத்தை அடைந்தார் டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் கணிப்பு, உண்மை ஆயிற்று.
ராஜகுமாரியின் முதல் படம் "கச்சதேவயானி" 1941_ல் வெளிவந்தது. அதில் கதாநாயகனாக நடித்தவர் கொத்தமங்கலம் சீனு. முதல் மூன்று நாட்களில் தியேட்டர்களில் கூட்டமே இல்லை. படம் பார்த்துவிட்டு வந்தவர்கள், "படம் நன்றாக இருக்கிறது. கச்சதேவயானியாக கச்சை கட்டிக்கொண்டு ராஜகுமாரி என்ற புது நடிகை நடிக்கிறார். ஆகா என்ன அழகு! என்ன அழகு" என்று கூற, தியேட்டர்களில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்தது.
பிறகு தினமும் "ஹவுஸ் புல்"தான். சென்னை உள் பட தமிழ்நாட்டின் பெரிய நகரங்களில் எல்லாம் இப்படம் 25 வாரம் ஓடியது.
1941_ல் "சூரிய புத்ரி" என்ற படத்தில் நடிக்க ராஜகுமாரி ஒப்பந்தம் ஆனார். இப்படத்தின் கதாநாயகனும் கொத்த மங்கலம் சீனுதான். டைரக்ட் செய்தவர், தமிழ்நாட்டுக்கு வந்து பல உன்னத படங்களை டைரக்ட் செய்த அமெரிக்க டைரக்டர் எல்லிஸ் ஆர்.டங்கன். இந்தப்படம் சுமாராகவே ஓடியது.
ஆனால், அடுத்த ஆண்டு பி.யு.சின்னப்பாவுடன் ஜோடியாக நடித்த மாடர்ன் தியேட்டர்ஸ் "மனோன்மணி" சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
"சின்னப்பா _ ராஜகுமாரி ஜோடிப்பொருத்தம் பிரமாதம்" என்று ரசிகர்கள் கருதினார்கள். எனவே அவர்கள் மீண்டும் ஜோடியாக நடித்தார்கள், ஜுபிடரின் "குபேர குசேலா" என்ற படத்தில்.
1943_ல் கோவை பட்சி ராஜா ஸ்டூடியோ தயாரித்த "சிவகவி" என்ற மகத்தான வெற்றிப் படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதருடன் முதன் முதலாக நடித்தார், ராஜகுமாரி. இதில் அவர் பாகவதருக்கு ஜோடி அல்ல என்றாலும், கதாநாயகிக்கு இணையான ராஜநர்த்தகி வேடத்தில் நடித்தார். "நாட்டியக்கலையே..." என்ற பாடலை பாகவதர் பாட, ராஜகுமாரி ஆட, ரசிகர்கள் கிறுகிறுத்துப் போனார்கள்.
1943_ல் வெளிவந்து, தமிழ்ப்பட உலகில் பெரும் புரட்சியை உண்டாக்கியது, "ஹரிதாஸ்". இதில் பாகவதரின் மனைவியாக பிரபல பாடகி என்.சி.வசந்தகோகிலம் நடித்தாலும், பாகவதரை மயக்கும் தாசி ரம்பாவாக ராஜகுமாரி நடித்தார். யுத்த காலக் கட்டுப்பாட்டினால் 11 ஆயிரம் அடிக்கும் குறைவாக அமைந்த இந்தப்படம், மூன்று தீபாவளிகளைக் கடந்து ஓடி, சாதனை நிகழ்த்தியது. இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.
"மன்மத லீலையை வென்றார் உண்டோ!" என்ற பாடலை பாகவதர் பாட, ராஜகுமாரி ஆடுவார். பல லட்சம் ரசிகர்களை ராஜகுமாரிக்குத் தேடித்தந்த நடனக்காட்சி அது.
இந்தப்படத்தைத் தொடர்ந்து சில படங்களில் ஜோடியாக நடிக்க பாகவதரும், ராஜகுமாரியும் ஒப்பந்தமானார்கள். அதில் "வால்மீகி"யும் ஒன்று. இப்படத்திற்காக இருவரும் நடித்த சில காட்சிகளும் படமாக்கப்பட்டன. ஆனால், துரதிஷ்டவசமாக லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் சிறை செல்ல நேரிட்டதால், அவருக்குப் பதிலாக ஹொன்னப்ப பாகவதர் நடித்தார். படம் ஓரளவு நன்றாகவே ஓடியது. பிறகு சின்னப்பாவுடன் "பங்கஜவல்லி" என்ற படத்தில் ராஜகுமாரி நடித்தார்.
1948_ம் ஆண்டு, ராஜகுமாரியின் வாழ்க் கையில் மட்டுமல்ல, தமிழ்த் திரைப்பட வர லாற்றிலும் குறிப்பிடத் தக்க ஆண்டாகும். அந்த ஆண்டு, ஜெமினி எஸ்.எஸ்.வாசன் ரூ.30 லட்சம் செலவில் பிரமாண்டமாகத் தயாரித்த "சந்திரலேகா"வில் ராஜகுமாரி நடித்தார்.
1948_ம் ஆண்டு, ராஜகுமாரியின் வாழ்க் கையில் மட்டுமல்ல, தமிழ்த் திரைப்பட வர லாற்றிலும் குறிப்பிடத் தக்க ஆண்டாகும். அந்த ஆண்டு, ஜெமினி எஸ்.எஸ்.வாசன் ரூ.30 லட்சம் செலவில் பிரமாண்டமாகத் தயாரித்த "சந்திரலேகா"வில் ராஜகுமாரி நடித்தார்.
ராஜகுமாரியின் திரை உலக வாழ்க்கையில் அவர் நடித்த மகத்தான படம் "சந்திரலேகா". ராஜகுமாரியின் முழுத் திறமையையும் வெளிப்படுத்திய படம். "சர்க்கஸ்" காட்சிகளில் ரசிகர்களைக் கவர்ந்தார். பிரமாண்டமான முரசாட்டத்தில் மின்னல் வேகத்தில் ஆடி அசத்தினார். "சந்திரலேகா"வை இந்தியில் மொழி மாற்றம் செய்து, வட இந்தியாவில் திரையிட்டார், வாசன். தமிழ்ப்படத்தை விட பல மடங்கு வசூலித்துக் கொடுத்தது, இந்தி சந்திரலேகா. பிறகு, படத்தின் நீளத்தைக் குறைத்து, "சந்திரா" என்ற பெயரில் ஆங்கிலத்தில் அமெரிக்காவில் திரையிட்டார், வாசன்.
No comments:
Post a Comment