Wednesday, August 26, 2009

அவ்வையார் 1953

அவ்வையார்
இயக்குனர்கொத்தமங்கலம் சுப்பு
தயாரிப்பாளர்எஸ். எஸ். வாசன்
ஜெமினி ஸ்டூடியோ
கதைதிரைக்கதை கொத்தமங்கலம் சுப்பு
நடிப்புஎம். கே. ராதா
ஜெமினி கணேசன்
எல். நாராயண ராவ்
ஜி. பட்டு ஜயர்
கொத்தமங்கலம் சுப்பு
கே. பி. சுந்தராம்பாள்
குசால குமாரி
சச்சு
வனஜா
சுந்தரி பாய்
டி. வி. குமுதினி
வெளியீடு நாட்கள்ஆகஸ்ட் 151953
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்15696 அடி

அவ்வையார் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கொத்தமங்கலம் சுப்புஇயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதாஜெமினி கணேசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.


ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் ரூ.30 லட்சம் செலவில் பிரமாண்டமாகத் தயாரித்த "அவ்வையார்" படத்தில், அவ்வையாராகவே வாழ்ந்து காட்டினார், கே.பி.சுந்தராம்பாள்.
 
"சந்திரலேகா"வை பிரமாண்டமாக எடுத்து மகத்தான வெற்றி பெற்றிருந்த "ஜெமினி" எஸ்.எஸ்.வாசன், அவ்வையார் படத்தை பெரிய பட்ஜெட்டில் சிறந்த முறையில் தயாரிக்க விரும்பி அவ்வையாராக நடிக்கும்படி சுந்தராம்பாளை கேட்டுக்கொண்டார். நீண்ட யோசனைக்குப்பிறகு சுந்தராம்பாள் ஒப்புக்கொண்டார்.
 
படத்தயாரிப்பு சுமார் ஐந்தாண்டுகள் நீடித்தது. படம் சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காக பணத்தை தண்ணீராகச் செலவழித்தார், வாசன். உழைப்பும், திறமையும், செலவும் வீண் போகவில்லை. 1953_ல் வெளிவந்த "அவ்வையார்", ஒரு உன்னத காவியமாக அமைந்தது. அவ்வையாராகவே வாழ்ந்தார் சுந்தராம்பாள். அவருடைய பாடல்களும், நடிப்பும் ரசிகர்களின் இதயங்களைத் தொட்டன. சுருக்கமாகச் சொன்னால் கறுப்பு_ வெள்ளையில் தயாரான மிகச் சிறந்த 10 படங்களை இன்று தேர்ந்தெடுத்தால், அதில் அவ்வையாருக்கு நிச்சயம் இடம் உண்டு.
 
இப்படத்தை கொத்தமங்கலம் சுப்பு டைரக்ட் செய்திருந்தார்.

No comments:

Post a Comment