மேனகா 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதுவே தமிழில் வெளிவந்த முதலாவது சமூகத் திரைப்படமாகும். வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்எழுதிய மேனகா என்ற துப்பறியும் புதினத்தைத் தழுவி மேடையேற்றப்பட்டடி.கே.எஸ்.சகோதரர்களின் மேனகா என்ற நாடகத்தையே திரைப்படமாக எடுத்திருந்தார்கள். ராஜா சந்தோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. கே. சண்முகம், டி. கே. பகவதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். என். எஸ். கிருஷ்ணன்இத்திரைப்படத்தின் மூலமே அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
| மேனகா | |
| இயக்குனர் | ராஜா சந்தோ |
|---|---|
| தயாரிப்பாளர் | ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீஸ் கோ. |
| கதை | கதை வடுவூர் கே. துரைசாமி ஜயங்கார் |
| நடிப்பு | டி. கே. சண்முகம் டி. கே. பகவதி டி. கே. சங்கரன் டி. கே. முத்துசாமி என். எஸ். கிருஷ்ணன் மொஹ்தீன் எம். எஸ். விஜயால் கே. டி. ருக்மணி |
| இசையமைப்பு | டி. கே. முத்துசாமி |
| வெளியீடு நாட்கள் | ஏப்ரல் 6, 1935 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 17000 அடி |



No comments:
Post a Comment