பாமா விஜயம் 1934 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். எல். டண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, ஜி. என். பாலசுப்பிரமணியம், பி. எஸ். ரத்னா பாய் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
நாரதர் வேடத்தில் வரும் கருநாடக இசை மேதை ஜி.என்.பாலசுப்பிரமணியம் நடித்த முதலாவது திரைப்படம் இதுவாகும். மகாராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி (மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் சகோதரர்) கிருஷ்ணர் வேடத்திலும், "பாளையம்கோட்டை சகோதரிகள்" என அழைக்கப்பட்ட பி.எஸ்.ரத்னா பாய், பி.எஸ்.சரஸ்வதி பாய் ஆகியோர் ருக்மணி, சத்தியபாமா வேடங்களிலும் நடித்தனர். இத்திரைப்படன் வசூலில் பெரும் வெற்றி பெற்றது. 50,000 ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு ஒரு மில்லியன் ரூபாய்களை வருவாயாகப் பெற்றது. ஹாலிவுட்டில் பயிற்சி பெற்ற மனிக்லால் டண்டன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
பாமா விஜயம் | |
இயக்குனர் | எம். எல். டண்டன் |
---|---|
தயாரிப்பாளர் | பயோனியர் பிலிம் கம்பனி |
நடிப்பு | மகாராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி ஜி. என். பாலசுப்பிரமணியம் பி. எஸ். ரத்னா பாய் பி. எஸ். சரஸ்வதி பாய் |
வெளியீடு நாட்கள் | 1934 |
No comments:
Post a Comment