Monday, August 31, 2009

இமயம் சரிந்தது



பராசக்தி பெற்ற தவப்புதல்வனின் மறைவால் தமிழ் இதயங்கள் அனைத்தும் குமுறியழுதுகொண்டிருக்கின்றன. ஈடுசெய்ய்யமுடியாத என்றசொற்றொடர் இலட்சத்தில் ஒருவரான நடிகர் திலகத்துக்குப் பொருந்தி உள்ளது.

ஈடு இணையற்ற நடிப்புலக இமயம் சரிந்ததால் இட்டுநிரப்பமுடியாத பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. பாடத்தெரிந்தவர்கள் தமிழ்த்திரை உலகை ஆக்கிரமித்திருந்தகாலம்.50சங்கீதங்கள் 75 சங்கீதங்கள் உள்ளதிரைப்படம் எனவிளம்பரம் செய்யப்பட்டகாலம். நடிகர்களுடன் நடிகர்களும் போட்டிபோட்டுப்பாடிநடித்தகாலம்.

ஒரு புதியநடிகர் மூச்சுவிடாமல் வசனம் பேசிநடித்ததால் தமிழ்த்திரை உலகம் அவரைத்திரும்பிப்பார்த்தது.ஒரே படத்தின் மூலம் வி.சி.கணேசன் பிரபலமானார்.1952 ஆம் ஆண்டு வெளியான "பராசக்தி" 52 வாரங்கள் ஓடிசாதனை புரிந்ததால் தமிழ்த்திரை உலகின் புதியசகாப்தம் ஆரம்பமானது.

கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்க வி.சி.கணேசன் காரணமானார். 9152 ஆம் ஆண்டி பராசக்தியைத்தொடர்ந்து இரண்டாவது படமான "பணம்" வெளியானது.என்.எஸ்.கிருஷ்ணன்,மதுரம் ஆகியோர் இணைந்து நடித்தனர். 1953 ஆம் ஆண்டு மூண்றாவது படமான "பரதேசி" என்ற தெலுங்குப் படம் வெளியானது. அதே ஆண்டு வெளியான "பூங்கோதை","திரும்பிப்பார்" ஆகியன வி.ச்.கணேசனின் புகழை அதிகமாக்கின.
9154 ஆம் ஆண்டி வெளியான"மனோகரா" மீண்டிம் ஒருமுறை கலைஞர்,கணேசன் கூட்டணியை புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றது. பராசக்தியின் வசனம் மறக்கமுதல் மனோகராவின் வசனம் ரசிகர்களின் உள்ளங்களில் நிறைந்தது.

மனோகரா படத்தில் படத்தில் வரும் மனோகரனின் தாயார் பத்மாவதி,தந்தை புருஷோத்தமன்,தந்தையின் காதலி வசந்தசேனை,வசந்தசேனையின் மகன் அசடன் வசந்தன் ஆகியபாத்திரங்களை அவர் நாடகத்தில் ஏற்று நடித்திருந்தார்.

சினிமாவுக்குமுன்னோட்டமாக நாடகத்தில் அனைத்துப்பாத்திரங்களையும் நடித்துள்ளார். நாடகத்தில் பத்மாவதியாக நடிகர்திலகம் நடித்ததுபோன்று திரைப்படத்தில் கண்ணாம்பா நடிக்கவில்லை என நாடகத்தைப்பார்த்தவர்கள்கள்கூறுகின்றார்கள்.அதே ஆண்டு ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான மனோகரா படத்திலும் இவர் நடித்தார்.மனோகரா வெளியாகி பரபரப்பான நேரம் "கூண்டுக்கிளி" என்ற படம் வெளியானது.இருபெரும் திலலங்கள் நடித்த இப்படம் தோல்வியடைந்தது.கூண்டுக்கிளி சிவாஜியின் 17 ஆவது படம்.

பராசக்தி பெற்ற தவப்புதல்வனின் மறைவால் தமிழ் இதயங்கள் அனைத்தும் குமுறியழுதுகொண்டிருக்கின்றன. ஈடுசெய்ய்யமுடியாத என்றசொற்றொடர் இலட்சத்தில் ஒருவரான நடிகர் திலகத்துக்குப் பொருந்தி உள்ளது.

ஈடு இணையற்ற நடிப்புலக இமயம் சரிந்ததால் இட்டுநிரப்பமுடியாத பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. பாடத்தெரிந்தவர்கள் தமிழ்த்திரை உலகை ஆக்கிரமித்திருந்தகாலம்.50சங்கீதங்கள் 75 சங்கீதங்கள் உள்ளதிரைப்படம் எனவிளம்பரம் செய்யப்பட்டகாலம். நடிகர்களுடன் நடிகர்களும் போட்டிபோட்டுப்பாடிநடித்தகாலம். ஒரு புதியநடிகர் மூச்சுவிடாமல் வசனம் பேசிநடித்ததால் தமிழ்த்திரை உலகம் அவரைத்திரும்பிப்பார்த்தது.ஒரே படத்தின் மூலம் வி.சி.கணேசன் பிரபலமானார்.1952 ஆம் ஆண்டு வெளியான "பராசக்தி" 52 வாரங்கள் ஓடிசாதனை புரிந்ததால் தமிழ்த்திரை உலகின் புதியசகாப்தம் ஆரம்பமானது.

கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்க வி.சி.கணேசன் காரணமானார். 1952 ஆம் ஆண்டுபராசக்தியைத்தொடர்ந்து இரண்டாவது படமான "பணம்" வெளியானது.என்.எஸ்.கிருஷ்ணன்,மதுரம் ஆகியோர் இணைந்து நடித்தனர். 1953 ஆம் ஆண்டு மூண்றாவது படமான "பரதேசி" என்ற தெலுங்குப் படம் வெளியானது. அதே ஆண்டு வெளியான "பூங்கோதை","திரும்பிப்பார்" ஆகியன வி.சி.கணேசனின் புகழை அதிகமாக்கின.
1954 ஆம் ஆண்டி வெளியான"மனோகரா" மீண்டும் ஒருமுறை கலைஞர்,கணேசன் கூட்டணியை புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றது. பராசக்தியின் வசனம் மறக்கமுதல் மனோகராவின் வசனம் ரசிகர்களின் உள்ளங்களில் நிறைந்தது.

மனோகரா படத்தில் படத்தில் வரும் மனோகரனின் தாயார் பத்மாவதி,தந்தை புருஷோத்தமன்,தந்தையின் காதலி வசந்தசேனை,வசந்தசேனையின் மகன் அசடன் வசந்தன் ஆகியபாத்திரங்களை அவர் நாடகத்தில் ஏற்று நடித்திருந்தார்.

சினிமாவுக்குமுன்னோட்டமாக நாடகத்தில் அனைத்துப்பாத்திரங்களையும் நடித்துள்ளார். நாடகத்தில் பத்மாவதியாக நடிகர்திலகம் நடித்ததுபோன்று திரைப்படத்தில் கண்ணாம்பா நடிக்கவில்லை என நாடகத்தைப்பார்த்தவர்கள்கள்கூறுகின்றார்கள்.அதே ஆண்டு ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான மனோகரா படத்திலும் இவர் நடித்தார்.மனோகரா வெளியாகி பரபரப்பான நேரம் "கூண்டுக்கிளி" என்ற படம் வெளியானது.இருபெரும் திலகங்கள் நடித்த இப்படம் தோல்வியடைந்தது.கூண்டுக்கிளி சிவாஜியின் 17 ஆவது படம்
கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி, இல்லற ஜோதி,துளிவிஷம்,தூக்குத்தூக்கி,எதிர்பாராதது ஆகியபடங்கள் நடிகர்திலகத்தின் நடிப்பாற்றலை வெளிப்படுத்தின.பாடத்தெரிந்த நடிகர்கள் நடித்த அந்த நாட்களிலேயே பாடல்கள் இல்லாத "அந்தநாள்" வெளியாகி புரட்சியை ஏற்படுத்தியது. 1957 ஆம் ஆண்டு "பராசக்தி" தெலுங்கில் வெளியானது.

பி.யு.சின்னப்பாவின் பாடல்களுடன்வெளியாகி வெற்றிபெற்றபடம் "உத்தமபுத்திரன்"1958 ஆம் ஆண்டு மீண்டும் நடிகர்திலகத்தின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றது. நடிகர் திலகம் முதன்முதலாக இரட்டை வேடங்களில் நடித்த "உத்தமபுத்திரன்" 100 நாட்களுக்குமேல் ஓடி சாதனை புரிந்தது.

"உத்தமபுத்திரன்" படத்தில் வரும் "யாரடி நீ மோகினி" என்றபாடலின் ஆட்டம் ரசிகர்களின் மனதை விட்டு என்றும் நீங்காது. அந்தப்பாடலைப்பற்றிக் றும்போதெல்லாம் "அந்தப்பெருமை எனக்கல்ல நடன இயக்குனர் ஹீராலாலுக்கே" என பணிவாகச்சொல்வார் நடிகர்திலகம்.
"சம்பூர்ணராமாயணம்" என்ற படத்தில் பரதனாகவே வாழ்ந்தார்.இந்தப்படம் 26 வாரங்கள் ஓடியது. "அன்னையின் ஆணை"திரைப்படத்தில் பெளத்ததர்மத்தை பரப்பும் சாம்ராட் அசோகனில் அசோகனாக நடித்து பெளத்த தர்மத்தை கண் முன் நிறுத்தினார்.1957 ஆம் ஆண் டுவெளியான"வீரபாண்டியகட்டப்பொம்மன்" இந்தியாசுதந்திரமடைந்த முதலாவது அத்தியாயத்தை மனதில் பதிய வைத்தது.வீரபண்டியகட்டப்பொம்மன் என்றால் சிவாஜி,சிவாஜி என்றால் வீரபண்டியகட்டப்பொம்மன் என்ற உணர்வை அனைவரின் மனதிலும் ஆழப்பதித்தது.
ஆசியாவின் சிறந்த நடிகர் என்ற பட்டமும், பிரான்ஸ் நாட்டின் அதி உன்னதமான் "செவாலியர்" விருதும் வீரபண்டிய கட்டப்பொம்மன் மூலம் சிவஜிக்குக் கிடைத்தது.
அங்கம் குறைந்த ஆணழகனாக நடித்த"பாகப்பிரிவினை"31வாரங்கள் ஓடியது. பாகப்பிரிவினையைத் தொடர்ந்து வெளியான "இரும்புத்திரை" 26வாரங்கள் ஓடியது. "படிக்காத மேதை" திரைப்படம் அவர் ஒரு படிக்காதமேதை என்பதை நிரூபித்தது. "தெய்வப்பிறவி" "விடிவெள்ளி" ஆகியனகுடும்ப உறவுகளால் ஏற்படும்குழப்பங்களின் விளைவுகளை வெளிக்காட்டின

சிவாஜிகணேசன் நடித்த "பாவமன்னிப்பு" 25 வாரங்கள் ஓடியது."பாவமன்னிப்பைத்தொடர்ந்து வெளியான "பாசமலர்"தமிழ்த்திரைப்படவரலாற்றில் புது அத்தியாயத்தை உருவாக்கியது.அண்ணன் தங்கை பாசம் எப்படி இருக்கவேண்டும் எனபதைஉணர்த்தியது. உருகாத உள்ளங்களையும் உருகவைத்தபடம் பாசமலர்.

நான் தனிப்பிள்ளை எனக்கு சகோதரர்களில் விருப்பம் இல்லை என்றவர்களே இப்படிப்பட்ட பாசமுள்ள அண்ணன் எனக்கு இருந்திருக்கக்கூடாதா என ஏங்கவைத்த படம் பாசமலர்.
சுதந்திரப்போராட்டத்தியாகியான வ.உ.சி யாக நடித்த "கப்பலோட்டியதமிழன்"இந்திய சுதந்திரபோராட்ட காலங்களை கண் முன்நிறுத்தியது.கொடை வள்ளல் கர்ணன் எப்படி இருந்திருப்பான் என்பதை நெஞ்சில் பதித்த படம்"கர்ணன்"."நவராத்திரி" படத்தின் மூலம் சிருங்காரம், ஹாஸ்யம்,கருணை,கோபம்,வீரம்,பயம்,அருவருப்பு,அற்புதம்,சாந்தம் ஆகிய நவரசங்களையும் ஒன்பது பாத்திரங்களாக நடித்து அதிசயிக்கவைத்தார்.

"சாந்தி" திரைப்படத்தில் "யாரிந்தநிலவு" என்ற பாடல் காட்சியை பட்மாகுவதற்கு இயக்குநர் பீம்சிங் சகலஏற்பாடுகளையும் செய்துவிட்டு நடிகர்திலகத்துக்கு பாடலைப்போட்டுக்காட்டினார் பாடலைக்கேட்டபின்னர் "இன்றுமன சரியில்லை நாளை படப்பிடிப்பை வைக்கலாம்" என்றுகூறினார் சிவாஜிகணேசன்.இரண்டு நாட்கள் படப்பிடிப்புதடைப்பட்டது.
என்ன செய்வதென்று தெரியாது தவித்த இயக்குநர் பீம்சிங் ,மூன்றாவது நாள் நடிகர் திலகத்தின் வீட்டுக்குப்போய் என்னபிரச்சினை எனக்கேட்டார்.

"எவ்வளவு அருமையான பாடல். எப்படி இசை அமைத்திருக்கிறார்கள். எவ்வளவு உருக்கமாகப்பாடியுள்ளார்.அந்தப்பாடலுக்கு ஒத்திக்கை பார்த்துவிட்டேன். நாளைக்குப்படப்பிடிப்பை வைக்கலாம்" என்றார். ஒருபாடல் காட்சி எவ்வளவு தத்ரூபமாக அமையவேண்டும் என்பதில் அவர் செலுத்திய அக்கறையே அப்பாடலின் வெறிக்குக்காரணமானது.

திராவிட முன்னேற்றக் கழகத்தில், சிவாஜி தொடர்ந்தும் இருந்திருந்தால் "திருவிளையாடல்" "கந்தன்கருணை" "திருவருட்செவ்வர்" "திருமால் பெருமை" "ராஜராஜசோழன்" " கர்ணன்"போன்ற் சிறப்பான படங்கள் ரசிகர்களுக்குக்கிடைத்திருக்காது.

1958ஆம் ஆண்டு வெளியான "தில்லானமோகனம்பாள்"சங்கீதம் தெரியாதவர்களையும் தாளம் போடவைத்தது. கொத்தமங்கலம் சுப்புவின் கதாபாத்திரங்கள்னான சிக்கல் சண்முகசுந்தரத்தை நடிகர் திலகமும், தில்லானாமோகனாம்பாளை நாட்டியப்பேரொளி பத்மினியும் கண்முன்னால் கொண்டுவந்துநிறுத்தினார்கள். நாதஸ்வரமேதை யும்,நாட்டியதாரகையும்எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நடித்துக்காட்டினர் .

திருவருட்செல்வரில் அப்பர் சுவாமிகளாகத்தனை வருத்தி ஒப்பனை செய்து தளர் நடை போட்டு உருண்டுபுரண்டுநடித்த சிவாஜி மீண்டும் தெய்வமகனில் தன்னை வருத்திநடித்தார். தெய்வமகனில் வரும் மூண்று சிவாஜியும் மூண்றுவித நடிப்பைவெளிப்படுத்தின.
புரட்சிப்படமான் "சிவந்தமண்" இலங்கையில் ஒருகாலத்தில் தடை செய்யப்பட்டபடம். அந்தப்படத்தில் நடிப்பதற்கு முதலில் எம்.ஜி.ஆர் ஒப்பந்தம்செய்யப்பட்டார். பின்னர் ஜெய்சங்கர் ஒப்பந்தம் செய்யப்படார். சிவாஜி நடித்த "தந்தி" என்ற ஹிந்திப்படம் 38 வாரங்கள் ஓடியது.
"வியட்நாம் வீடு" "விளையாட்டுப்பிள்ளை" "ராமன் எத்தனை ராமனடி""எங்கிருந்தோ வந்தாள்" வசந்தமாளிகை""சொர்க்கம்" "பாபு""நீதி"கெளரவம்" "அவன்தான் மனிதன்" "ஞானஒளி" உட்படபலபடங்கள் ரசிகர்களின் மனதை விட்டுநீங்காத படங்களாகும்.
1972 ஆம் ஆண்டு வெளியான "வசந்தமளிகை" இலங்கையிலும் இந்தியாவிலும் ஒரே நேரத்தில் வெளியான முதலாவது தமிழ்ப்படம். இந்தியாவில் 250 நாட்களூம், இலங்கையில் 41 வாரங்களும் ஓடியது.ஒருபிரதி இரண்டுதிரை அரங்குகளில் ஓடிய முதலாவது படமும் இதுதான். யாழ்ப்பாணத்தில் உள்ள வெலிங்டன்,லிடோ ஆகிய இரு திரை அரங்குகளில் ஒரே ஒரு படப்பிரதியுடன் 150 நாட்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்தது.

1973 ஆம் ஆண்டு முதலாவது தழிழ் சினிமாஸ்கோப்படமான "ராஜராஜசோழன்" வெளியானது.
1971 ஆம் ஆண்டுமுதல் 1983 ஆம் ஆண்டுவரை இவர் நடித்த ஒரு சிலவற்றைத்தவிர மற்றைய எல்லாம் வெற்றிப்படங்களே. இவர் நடித்தபடங்கள் இந்தியாவில்; மட்டுமன்றி இலங்கையிலும் 100 நாள், வெள்ளிவிழா கொண்டாடியதுடன் வசூலிலும் சாதனை படைத்தன.

அவர் நடிக்கவுள்ள பாத்திரத்தைப்பற்றி இயக்குநரோ தயாரிப்பளரோ கூறியவுடன் ஒப்பனைக்கலைஞரான ரங்கசாமியை அழைத்து இந்த வேடம் எப்படி இருக்கவேண்டும். தலை எப்படி இருக்க வேண்டும் எனக்கூறி விடுவார்.ஒவ்வொரு வேடத்துக்கும் ஒவ்வொருவித்தியாசம் இருக்கவேண்டும் என்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருப்பார்.

சிவாஜி நடித்த படங்களின் கதாசிரியர், இயக்குநர்யாராக இருந்தாலும் அது சிவாஜி படமென்றேபேசப்பட்டது. நடிகர் யாரெனப்பார்த்தே ரசிகர்கள் அன்று படம்பார்த்தார்கள். சகநடிகர்கள் எப்படிநடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.தனக்கு ஈடாகமற்றவர்களும் நடிக்கவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.தன்னுடன் நடிப்பவர்கள் எப்படி நடிக்கவேண்டும் என நடித்துக்காண்பிப்பார்.

அவருடய ஒவ்வொருபடமும் ஒவ்வொரு அத்தியாயம் நடிப்பு என்ற மொழியின் பல்கலைக்கழகமான அவ்ரின் சதனையை முறியடிக்க யாரலும் முடியாது. படப்பிடிப்புக்குத்தயாராகிவிட்டால் பாத்திரமாகவேமாறிவிடுவார். சக்கரவர்த்தியாக, மன்னனாக,சேவகனக,வக்கீலாக,நீதிபதியாக,பொலிஸ் அதிகாரியாக அவர் மாறிவிடுவார்.
சிறுவயதுவேடங்களில் தொப்பை வயிறுடன் ஓடி ஆடிசில படங்களில் சிவாஜி நடித்தபோது இது இவருக்குத்தேவைதானா என்ற கேள்வி எழுந்தது.

எனக்கேற்ற வேடங்களை உருவாக்கித்தாருங்கள் என சிவாஜி சவால்விட்டார். அதன் பின் வெளியான" மிருதங்கசக்கரவர்த்தி" மிருதங்க வித்துவானுக்கு சவால் விட்டது.
மிடுக்கான பொலிஸ் அதிகாரியான வெள்ளை ரோஜா ,திருப்பம்என்பனவும் தராசுபட வக்கீல் வாழ்க்கை படத்தில் தனிமனித வாழ்க்கைப்போராட்டத்தைசித்திரிக்கும் பாத்திரம்
சிரஞ்சீவி படத்தின் கப்பல் சிப்பந்தி ஆகியபாத்திரங்கள் சிவாஜியைக் குறை கூறியவர்களுக்கு பதிலாக அமைந்தது.

பராசக்தி_குணசேகரன் கள்வனின்காதலி_முத்தையன் உத்த்மபுத்திரன்_பார்த்திபன்,விக்கிரமன் படிக்காதமேதை_ரங்கன் பாகப்பிரிவினை_கண்ணையன் பாசமலர்_ராஜசேகர் தில்லானாமோகனாம்பா_ள் சிக்கல் சண்முகசுந்தரம் தெய்வமகன்_சந்து,விஜயன்,கண்ணன் சிவந்தமண்_பாரதி வியட்நாம்வீடு_பிரஸ்டீஜ் பத்மனாதஐயர்
எங்கள்தங்கராஜா_பட்டாக்கத்திபைரவன் பட்டிக்காடாபட்டணமா_மூக்கையன் கெளரவம்_பரிஸ்டர் ரஜினிகாந்த் நவராத்திரி ஒன்பது வேடங்கள் போன்ற பலவும் கற்பனைப்பத்திரங்கள்தான் என்றாலும் அவை அனைத்தும்மனதை விட்டு நீங்காதவை.

உணர்ச்சிகரமாக நடிக்கும்போது அவரது கண்கள் தானாகவே சிவந்துவிடும்.திருவிளையாடல் படத்தில் சிவபெருமானாக நடிக்கும் போது கண்களை இமைக்காமல் இருந்தார். நடிகர் திலகத்தின் காலத்தில் கே.ஆர். ராமசாமி, பாலையா,ரங்கராவ்,சகஸ்ரநாமம்,கண்னாம்பா,பானுமதி,எம்.ஆர்.ராதா,ஜெமினிகணேசன் ,எஸ்.எஸ்.ராஜேந்திரன்,முத்துராமன்,நம்பியார்,மேஜர் சுந்தரராஜன்,நாகேஷ்,எஸ்.வி.சுப்பையா,கே.ஆர்.விஜயா,சாவித்திரி,சரோஜாதேவி,சுஜாதா,ஜெயலலிதா ஆகியோர் சிவாஜிக்குப்போட்டியாக நடித்தனர்.
திருவிளையாடல் படத்தில் தருமி வேடத்தில் நடித்த நாகேஷ் இரண்டு நிமிடங்களில் நடிகர் திலகத்தை ஓரம் கட்டும்வகையில் நடித்தார்.அதை நடிகர்திலகம் சவாலாக ஏற்றுக்கொண்டாரேதவிர பொறாமையாக நினைககவில்லை.கிருஷ்ணன்_பஞ்சு,ஏ.பி.நாகராஜன்,பீம்சிங், ஸ்ரீதர்,ஏ.சி.திருலோகசந்தர்,சி.வி.ராஜேந்திரன் போன்றோர் சிறந் தமுறையில் சிவாஜியை இயக்கினார்கள்.
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி,கவிஞர் கண்ணதாசன்,சக்தி கிருஷ்ணசாமி,வியட்நாம்வீடு சுந்தரம்,தங்கப்பத்க்கம் மகேந்திரன்,போன்றவர்களின் வசனங்களுக்கு சிவாஜிகணேசன் உயிரூட்டினார்.கவிஞர் கண்ணதாசன்,ரி.எம்.செளந்த்ரராஜன்,விஸ்வநாதன்_ராமமூர்த்தி,சிவாஜிகணேசன் கூட்டணியை உடைக்க எத்தனை நூற்றாண்டு சென்றாலும் முடியாது.
விஜய்,அர்ஜுன்,முரளி ஆகிய இள்ம் நடிகர் களுடனும் நடித்துள்ளார். முதல் மரியாதை,தேவர் மகன், படையப்பா ஆகியன அவருக்கு புகழையும் பெருமையையும் ஏற்படுத்தின.
1985ஆம் ஆண்டு வெளீயான முதல் மரியாதை அவர்மீது மரியாதையை ஏற்படுத்தியது. பழய ரசிகர்களும் புதிய ரசிகர்களும் அவரின் நடிப்பாற்றலை வியந்துபாராட்டியபடம் முதல் மரியாதை.
அரசியலில் அவர் தோல்வியடைந்தாலும் நேரு,இந்திராகாந்தி,ராஜாஜி,அறிஞர் அண்ணா, காமராஜர் ஆகியோர் அவர் மீது மி குந்த மதிப்புவைத்திருந்தனர். தமிழ்நட்டின் முதல்வர்களான பக்தவத்சலம்,கர்மவீரர் காமராஜர்,அறிஞர் அண்ணா,கலைஞர் கருணாநிதி,மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா,வி.என்.ஜானகி ஆகியோ ருடன் அவருக்கிருந்த தொடர்பு மிக இறுக்கமானது.
தமிழகதலை நகரானசென்னை செவாலியர் வீதியில் உள்ள அன்னை இல்லத்தின் துயரசம்பவமாக மட்டும் இது அமையவில்லை.உலகத்தமிழர்கள் அனைவரின் வீட்டிலும் நடைபெற்ற துயர சம்பவமாகவேஇது அமைந்தது.
சிவாஜி மறைந்ததில் இருந்து தகனக்கிரியை நடைபெறும் வரை தமது இன்பம் துன்பம் அனைத்தையும் மறந்து நடிப்புலக மாமேதைக்காக உருகினார்கள்.கலைஞரின் வசனத்தில் பெரியாராக நடிக்கும் அவரின் கனவு நிராசையானது.
சாம்ராட் அசோகன்,கர்ணன்,செக்கிழுத்தசெம்மல் வ.உசி, புரட்சிக்கவிஞர் பாரதி,வீரபாண்டியகட்டபொம்மன், காத்தவராயன்,அரிச்சந்திரன்,பரதன், மகாகவிகாளிதாசன்,அம்பிகாபதி,சலீம்,சாஜஹான்,அப்பர்,திருமங்கையாள்வார்,குலசேகராழ்வார்,சிவாஜி போன்றகாவியநாயகர்களும், பத்மனாதன்,செள்த்ரி, பரிஸ்டர்ரஜினிகாந்த்போன்றசமூக நாயகர்களும் ஒரே இரவில் வி.சி.கணேசனுடன் சென்றுவிட்டர்கள்.
சூரன்.ஏ.ரவிவர்மா

Wednesday, August 26, 2009

மனம்போல் மாங்கல்யம் 1953

மனம் போல் மாங்கல்யம்
இயக்குனர்பி. புள்ளையா
தயாரிப்பாளர்நாராயண ஜயங்கார்
நாராயணன் அண்ட் கம்பனி
கதைகதை சதாசிவ பிரம்மன்
நடிப்புஜெமினி கணேசன்
டி. என். சிவதானு
பிரெண்ட் ராமசாமி
கே. சாரங்கபாணி
சாவித்ரி
எம். ஆர். சந்தான லக்ஸ்மி
பாலசரஸ்வதி
இசையமைப்புஏ. ராமராவ்
வெளியீடு நாட்கள்நவம்பர் 11953
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்15535 அடி

மனம் போல் மாங்கல்யம் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புள்ளையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன்டி. என். சிவதானு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மதனமோகினி 1953

மதன மோகினி
இயக்குனர்எம். எல். பதி
தயாரிப்பாளர்லிபேர்ட்டி பிக்சர்ஸ்
கதைகதை கயர் கண்ணழகன்
நடிப்புநரசிம்ம பாரதி
புலிமூட்டை ராமசாமி
பி. எஸ். வீரப்பா
எம். எல். பதி
பொள்ளாச்சி கமலா
டி. ஆர். ராஜகுமாரி
அங்கமுத்து
எம். வி. நவநீதம்
இசையமைப்புகே. வி. மகாதேவன்
வெளியீடு நாட்கள்மார்ச் 141953
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்15845 அடி

மதன மோகினி 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.எம். எல். பதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நரசிம்ம பாரதிபுலிமூட்டை ராமசாமிமற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பொன்னி 1953

பொன்னி
இயக்குனர்ஏ. எஸ். ஏ. மணி
தயாரிப்பாளர்எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு
பக்ஷிராஜா ஸ்டூடியோஸ்
கதைஏ. எஸ். ஏ. மணி
நடிப்புஸ்ரீராம்
டி. எஸ். பாலைய்யா
டி. பாலசுப்பிரமணியம்
எம். ஆர். சுவாமிநாதன்
லலிதா
பத்மினி
பி. சாந்தகுமார்
பி. எஸ். ஞானம்
இசையமைப்புஎஸ். எம். சுப்பைய்யா நாயுடு
வெளியீடு நாட்கள்ஜூன் 261953
கால நீளம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்16460 அடி

பொன்னி 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்ஸ்ரீராம்டி. எஸ். பாலைய்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பெற்றதாய் 1953

பெற்ற தாய்
இயக்குனர்கே. எஸ். பிரகாஷ் ராவ்
தயாரிப்பாளர்கே. எஸ். பிரகாஷ் ராவ்
பிரகாஷ் புரொடக்ஷன்ஸ்
கதைதிரைக்கதை ஏ. சுபராமன்
நடிப்புஏ. நாகேஸ்வர ராவ்
நம்பியார்
எஸ். ஏ. கண்ணன்
சிவராம்
ஜி. வரல்டசுமி
டி. டி. வசந்தா
கே. ஆர். செல்லம்
ராஜசுலோச்சனா
இசையமைப்புபெண்டியால்லா
வெளியீடு நாட்கள்1953
கால நீளம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பெற்ற தாய் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ்,நம்பியார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பூங்கோதை 1953

பூங்கோதை
இயக்குனர்எல். வி. பிரசாத்
தயாரிப்பாளர்அஞ்சலி பிக்சர்ஸ்
நடிப்புஏ. நாகேஸ்வர ராவ்
சிவாஜி கணேசன்
எஸ். வி. ரெங்கராவ்
ரெலங்கி
டி. கே. ராமச்சந்திரன்
அஞ்சலி தேவி
வசந்தா
பண்டரிபாய்
சூர்யகாந்தம்
இசையமைப்புஆதி நாராயண ராவ்
வெளியீடுபெப்ரவரி 11953
நீளம்15380 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பூங்கோதை 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன்ஏ. நாகேஸ்வர ராவ்மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பரோபகாரம் 1953

பரோபகாரம்
இயக்குனர்கமல் கோஷ்
தயாரிப்பாளர்ஹோபா பிலிம்ஸ்
கதைதேவகி போஸ்
நடிப்புரமேஷ் ஷர்மா
சி. எஸ். ஆர்
ரெலங்கி
ஆர். நாகேஸ்வர ராவ்
முக்கமலா
சாவித்திரி
ஜி. வரலட்சுமி
இசையமைப்புகந்தசாலா
வெளியீடு நாட்கள்1953
கால நீளம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்14904 அடி

பரோபகாரம் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கமல் கோஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரமேஷ் ஷர்மாசி. எஸ். ஆர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.